Home LATEST NEWS 10ம் வகுப்பு பொதுதேர்வில் மாஸ் காட்டிய மாணவர்கள்!

10ம் வகுப்பு பொதுதேர்வில் மாஸ் காட்டிய மாணவர்கள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55%. கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது.

தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.53%, மாணவர்கள் 88.58% தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

1,364 அரசுப்பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டலுக்கு வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
விடைத்தாள் நகல் பெறவும் வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Exit mobile version