ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் 300க்கும் மேற்பட்ட பைலட்கள், ஊழியர்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒரே நேரத்தில் லீவ் எடுத்துள்ளனர். லீவ் எடுத்த ஊழியர்கள் தங்களின் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து இருந்தனர். அவர்களைத் தொடர்புகொள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முயற்சி செய்தது.
இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 30 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இந்த தகவல் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தினால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
80க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர். ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஊழியர்கள் சமத்துவமாக நடத்தப்படுவது இல்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.