Home LATEST NEWS ஆள் சேர்த்துவிட்டால் கமிஷன்: சென்னையை அதிரவைக்கும் ஐபிஎல் சூதாட்டம்!

ஆள் சேர்த்துவிட்டால் கமிஷன்: சென்னையை அதிரவைக்கும் ஐபிஎல் சூதாட்டம்!

சென்னையில் ஐபிஎல் சூதாட்டம் களைகட்டுகிறது. வட இந்தியாவில் இருந்து இயக்கப்படும் பெட்டிங் இணையதளங்களில் கிரிக்கெட் சூதாட்டத்திற்கு ஆள் சேர்த்து விடுவதன் மூலம் ஒவ்வொரு பெட்டிங்க்கும் ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை இணையதளம் வாயிலாக ஏஜெண்டுகளுக்கு கிடைத்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சூதாட்ட இணையதளங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட அணிகள் விளையாடும்போது அதிக அளவில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் மேட்ச்சில் ஒரு ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எத்தனை ரன்கள் எடுப்பர்? தோனி எத்தனை ரன் அடிபார்? நடப்பு ஓவரில் விக்கெட் விழுமா? விழாதா? என்பதுபோல பெட்டிங் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version