Home LATEST NEWS பெண் வேட்பாளர்களை கவனிக்கும் பாஜக!

பெண் வேட்பாளர்களை கவனிக்கும் பாஜக!

முதல் மற்றும் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்கள் 8 சதவீதம் பேர் தான் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. போட்டியிட்ட 2,823 வேட்பாளர்களில் 235 பேர் மட்டுமே பெண்கள்.

முதல் கட்ட தேர்தலில் 135 பேரும், 2ம் கட்ட தேர்தலில் 100 பேர் என 235 பெண்கள் போட்டியிட்டனர்.முதல்கட்ட தேர்தலில் போட்டியிட்ட 135 பெண்களில், அதிகபட்சம் 76 பேர் தமிழகத்தில் போட்டியிட்டனர். இருப்பினும், தமிழகத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இது வெறும் 8 சதவீதம் மட்டுமே.

அதேபோல் 2ம் கட்ட தேர்தலில் 100 பெண் வேட்பாளர்களில் அதிகபட்சமாக கேரளாவில் 24 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த இரு கட்ட தேர்தலில் அதிக பெண்களை களமிறக்கியதில் பாஜக முதலிடத்தில் உள்ளது. அக்கட்சி சார்பில் 69 பேர் போட்டியிட்டனர்.

Exit mobile version