Home LATEST NEWS 92 நாடுகளின் ஐபோன் பயனர்களை எச்சரித்த ஆப்பிள்! – Apple Warning

92 நாடுகளின் ஐபோன் பயனர்களை எச்சரித்த ஆப்பிள்! – Apple Warning

Apple Warning: இந்தியா உட்பட 92 நாடுகளில் உள்ள ஐபோன் பயனர்களின் செல்போன் உளவு பார்க்கப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பியுள்ளது. அதிகாலை 12.30 மணியளவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனர்களுக்கு உளவு அபாய எச்சரிக்கை பற்றிய தகவலை அனுப்பியுள்ளது. யாரையும் குற்றம் சாட்டாமல் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. தகவல் எத்தனை பேருக்கு சென்றடைந்தது என தெளிவான தகவல்கள் இல்லை.

ஆப்பிள் உங்கள் ஐபோனுக்கு எதிராக குறி வைக்கப்பட்ட உளவு மென்பொருள் தாக்குதலை கண்டறிந்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் அரிதானவை. ஒரு சிலரை மட்டுமே குறிவைக்கின்றன. எனவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் லிங்குகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version