Bengaluru: பெங்களூரு நகரில் கல்லூரி மாணவர்களிடையே இரண்டு பேருக்கு காலரா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கம் விடுதி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலிக்கான் சிட்டியில் உள்ள தங்கும் விடுதிகளில் காலரா பரவுவதை தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை தொடர்ந்து சரிபார்த்து கண்காணிக்க வேண்டும்.
காலரா அறிகுறிகள் தென்படும் நபர்கள் உடனடியாக PG உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும்.
தங்கும் விடுதிகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுவரை பேதி, நீரிழப்பு அறிகுறிகள் கொண்ட 47 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த 47 பேரில் தான் இரண்டு மாணவர்களும் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.