ஷவர்மா சாப்பிடுவோர் உஷார்: கேரளா, ஆந்திராவில் பறவை காய்ச்சல்!

24

கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்ல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சிக்கன் ஷவர்மா உணவு வகையை முழுமையாக வேக வைப்பதுடன் பாக்டீரியா தொற்று இல்லாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.

சிக்கன் ஷவர்மாவால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உணவகங்களை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பாக்டீரியாக்கள் இருக்கும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இறைச்சியின் அனைத்து பகுதிகளையும், முறையாக வேக வைத்திருக்க வேண்டும். அதேபோல, அவ்வப்போது புதிதாக தான், மயோனைஸ் தயாரிக்க வேண்டும். பல மணி நேரம் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.