Home LATEST NEWS சுடச்சுட பிரியாணி, சிக்கன் வறுவல்: பூத் ஏஜெண்ட்களுக்கு கவனிப்பு! – Booth Agent

சுடச்சுட பிரியாணி, சிக்கன் வறுவல்: பூத் ஏஜெண்ட்களுக்கு கவனிப்பு! – Booth Agent

Booth Agent: வாக்குசாவடிக்குள் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பில் பூத் ஏஜென்ட் எனப்படும் முகவர்கள் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் வாக்குபதிவு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றி அனுப்பும் வரை முகவர்கள், வாக்குசாவடியை விட்டு வெளியேற கூடாது.

அவர்களுக்கு சுடச்சுட உணவு வழங்க, சைவ உணவுக்கு தனியாகவும், பிரியாணிக்கு தனியாகவும் சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். காலை டிபனாக இட்லி, பொங்கல், பூரி, வடை, கேசரி பார்சல் செய்து கட்சியினர் மூலமாக காலை 8 மணிக்குள் வழங்கப்பட உள்ளது.

மதியம் தலா 75 கிராம் எடையில் நான்கு பீஸ் உடன் மட்டன் பிரியாணி, 5 பீஸ் உடன் சிக்கன் வறுவல் வழங்கப்பட உள்ளது. மாலை சுண்டல், ஒரு தோசை, 2 சப்பாத்தி குருமா, சாம்பார் வழங்கப்பட உள்ளது. பாஜக வேட்பாளர்கள் முகவர்களுக்கு உணவு வழங்க, ஹோட்டல்களில் ஆர்டர் தந்துள்ளனர்.

Exit mobile version