புதுச்சேரியை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை போலீஸார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வழக்கில் விவேகானந்தன், கருணாஸ் என இருவரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியபோது சிறுமி உயிரிழந்ததால், சடலத்தை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
சிறுமி வழக்கு தொடர்பாக 80 சாட்சிகளின் வாக்குமூலத்துடன் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை போலீசார் தாக்கல் செய்தனர். கைதான இருவரின் வாக்குமூலங்கள் அடங்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சீலிட்ட உறையில் இருந்தது.
புதுச்சேரி சிறுமி வழக்கின் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டதால், வழக்கு விசாரணை வேகமெடுக்கும் என்றும், விரைவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.