Home LATEST NEWS கோஷ்டி பிரச்னை உச்சம்: ஓட்டு வங்கியில் ஓட்டை விழுமா? – VCK

கோஷ்டி பிரச்னை உச்சம்: ஓட்டு வங்கியில் ஓட்டை விழுமா? – VCK

VCK: கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக மலையரசன் போட்டியிடுகிறார். திமுகவினருடன் தேர்தல் பணிகள் செய்வது தொடர்பாக ஆலோசிக்க சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அப்போது இரு மூத்த நிர்வாகிகள் கோஷ்டிகளாக கட்சியினருடன் வந்து தனித் தனியாக மாவட்ட செயலரை சந்தித்து பேசினர். தேர்தல் பிரசாரத்துக்கு குறைவான நாள் உள்ள நிலையில் கூட்டணியில் உள்ள விசிக கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பிரச்னை திமுக வாக்கு வங்கியில் ஓட்டை விழ வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் உடன் பிறப்புகள் உள்ளனர்.

மாவட்டத்தில் விசிக கட்சிக்கு மட்டும், 1.50 லட்சம் வாக்கு வங்கி உள்ளது. இப்போது உள்ள மாவட்ட செயலர்கள் இப்பகுதி பிரச்னை குறித்து தெரியாதவர்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலர் மூத்த நிர்வாகிகளை கண்டு கொள்வதில்லை. இதனால் எங்கள் வாக்குகள் ஒரு லட்சம் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் வேறு கட்சிக்கு போட முடிவு செய்துள்ளோம் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள்.

Exit mobile version