Home HEALTH & BEAUTY கோவாக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை!

கோவாக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை!

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில் கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தங்களுக்கும் தடுப்பூசியால் எதாவது ஆபத்து ஏற்படுமா என மக்கள் பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. 27,000 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட முடிவில் கோவாக்சின் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version