ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கிறது. ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம் இந்தியாவில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் ஐரோப்பா நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
லண்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அளித்த வாக்குமூலத்தில் தடுப்பூசியால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பாதிப்பு அரிதாக சிலருக்கு ஏற்படலாம் என கூறியுள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தாங்கள் தயாரித்த தடுப்பூசிகளை உலகளவில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வணிக காரணங்களுக்காக இந்த தடுப்பூசியை திரும்ப பெற்றுக் கொள்ளப்படுகிறது. புதிய வகை கோவிட் திரிபுகளை சமாளிக்கும் வகையிலான புதிய மருந்துகள் வந்துவிட்டது. இனிமேல் இந்த மருந்துகள் உற்பத்தி செய்யப்படாது. பயன்படுத்த முடியாது. முதல்கட்டமாக ஐரோப்பிய யூனியனில் இந்த மருந்து திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், அடுத்தடுத்து உலகளவில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.