Home HEALTH & BEAUTY கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து வெளியான பகீர் தகவல்!

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து வெளியான பகீர் தகவல்!

கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் அதை தயாரித்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டது.

தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 100 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்ட ஈடுகோரி மக்கள் மனு அளித்திருந்தனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு, TTS எனப்படும் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் இது ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து துல்லியமாக தெரியவில்லை என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version