Home TOP STORIES இதுவல்லவா மதநல்லிணக்கம்? துபாய் இந்து கோவிலில் இப்தார் விருந்து! – Dubai Hindu Temple

இதுவல்லவா மதநல்லிணக்கம்? துபாய் இந்து கோவிலில் இப்தார் விருந்து! – Dubai Hindu Temple

முதல் முறையாக இப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்து கோவிலில் ஏற்பாடு

Dubai Hindu Temple: அபுதாபி-துபாய் நெடுஞ்சாலையில் முரைக்கா என்ற பகுதியில் இந்து கோயில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

குஜராத்தை சேர்ந்த BABS என்ற அமைப்பு இந்த கோவிலை நிர்வகிக்கிறது. மதநல்லிணக்கத்துடன் கட்டப்பட்டுள்ள கோவிலை மக்கள் பாகுபாடின்றி பார்வையிட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1ல் மக்கள் பார்வையிட திறக்கப்பட்ட இந்த கோவிலை இதுவரை 4 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக BABS அமைப்பு தகவல் அளித்துள்ளது. ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் சராசரியாக 50 ஆயிரம் பேர் வருகை புரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது ரமலான் மாதம் நடந்து வருவதால் முதல் முறையாக இப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மதநல்லிணக்கம், சகோதரத்துவத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் துபாய் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்து கோவிலின் தன்னார்வலர்கள் தயாரித்த சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டது. தொடர்ந்து அந்த வளாகத்தில் அதிகாலையில் நோன்பு வைப்பதற்கு முன் உண்ணப்படும் சஹர் உணவும் வழங்கப்பட்டது.

Exit mobile version