Home LATEST NEWS வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு ஆப் காரணமா? – Poll Percentage

வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு ஆப் காரணமா? – Poll Percentage

Poll Percentage: தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பிறகு தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குகள் பதிவானது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்புக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்புக்கும் நிறைய வேறுபாடு இருப்பதால் வாக்கு சதவீதத்தில் குளறுபடியா? என கேள்வி எழுந்தது.

செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கிட்டதால் சில குளறுபடிகள் நடைபெற்றன. செயலியில் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களும் கட்டாயமாக அப்டேட் செய்ய வேண்டும் என்று எந்த உத்தரவும் இல்லை எனக் கூறி ஒரு சிலர் மட்டுமே அப்டேட் செய்தார்கள். இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என சத்யபிரதா சாகு கூறினார்.

Exit mobile version