தமிழகத்தில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக கோடைக்கால தொடக்கத்தில் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெயில் கொளுத்தியது. இப்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில், தமிழகத்துக்கு வெப்ப அலைகளுக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுவரை தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.