Road Lights: ரோட்டின் ஓரங்களில் பிரதிபலிப்பான்கள் எனப்படும் மினுமினுக்கும் லைட்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதனை பூனைக் கண்கள் என்று சொல்வார்கள். குறிப்பாக வெளிச்சம் அதிகம் இல்லாத ரோடுகளில் இந்த பிரதிபலிப்பான்கள் ரோட்டின் ஓரத்தில் பதிக்கப்பட்டிருக்கும். ரோட்டின் மேற்பரப்பிற்கு சற்று மேலே உயர்த்தப்பட்டிருப்பதால், வாகனம் ஓட்டும்போது டிரைவர் கண் அசந்துவிட்டால் அவர்களை அலர்ட் செய்து விபத்தை தடுக்க இந்த லைட்டுகள் உதவுகிறது.
இரவில் ஒளிரும் பிரதிபலிப்பான்கள் உள்ளே சோலார் பேனல் மற்றும் பேட்டரியைக் கொண்டுள்ளது. பகலில் சூரிய ஒளி படும்போது, சோலார் பேனல் மின்சாரத்தை உற்பத்தி செய்து பேட்டரியை சார்ஜ் செய்கிறது. மாலை நேரம் சூரியன் மறைந்து இருள் வந்தவுடன், அதே பேட்டரி பிரதிபலிப்பான்களில் நிறுவப்பட்ட லைட்களுக்கு மின்சாரம் வழங்குகிறது. இதனால் பிரதிபலிப்பானில் உள்ள LED ஒளிரத் தொடங்குகிறது. அதாவது எரிந்து அணைக்கத் தொடங்குகிறது.