Home LATEST NEWS ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? – Iran

ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? – Iran

Iran: சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மீது 300 ட்ரோன்கள் அனுப்பி ஈரான் தாக்குதல் நடத்த பார்த்தது. அதனை இஸ்ரேல் முறியடித்துள்ளது. இஸ்ரேலில் எந்த இடங்களை ட்ரோன்கள் தாக்கியது என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஈரான் அனுப்பிய 99 சதவீத ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தங்கள் வான்வழியை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தபட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஈரான் அனுப்பிய 300 ட்ரோன்களை வழிமறித்து அழித்தது எப்படி? என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது.

ஈரான் நடத்திய அதிரடி தாக்குதலில் இருந்து இஸ்ரேலை காக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் உதவி வருகின்றன. இதனால் உலக போர் மூளுமோ என்ற அச்சத்தில் சர்வதேச நாடுகள் பதற்றத்தில் உறைந்து போயுள்ளன.

Exit mobile version