கிணற்றில் தேடப்படும் ஜெயக்குமார் செல்போன்: திடீரென திருப்பம்!

38

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் வேகமெடுக்கிறது விசாரணை. நெல்லை மாவட்ட தடயவியல் பிரிவு உதவி இயக்குனர் ஆனந்தி ஆய்வு செய்து வந்த நிலையில், மதுரை, திண்டுக்கல்லில் இருந்தும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

ஜெயக்குமாரின் உடல் கிடந்த இடம் உள்ளிட்ட தோட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் நிபுணர்கள்
தோட்ட அறையில் இருந்த இரும்பு வயர் மூலமாக ஜெயக்குமார் கட்டப்பட்டது தெரிய வந்த நிலையில் தோட்ட ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.

ஜெயக்குமாரின் செல்போன் எண்கள் மூலம் ஒரு மாத காலத்தில் எத்தனை பேரிடம் பேசினார் என்ற விவரம் சேகரிப்பு
2,000க்கும் மேற்பட்டோரிடம் பேசிய நிலையில், அதிக முறை பேசியவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர தனிப்படை திட்டம் போட்டுள்ளது.