Home LATEST NEWS கேரளாவில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு!

கேரளாவில் மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு!

கடும் வெப்பம் காரண மாக கேரளாவில் மின் பயன் பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது. கடும் வெப்பம் காரணமாக மாநிலத்தில் மின் நுகர்வு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மண்டல வாரியாக மின் கட்டுப் பாடு நடவடிக்கையை கேரள மாநில மின்வாரியம் மேற் கொண்டுள்ளது.

அதன்படி மின் நுகர்வு அதிகமாக உள்ள பகுதிகளில் இந்த கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. பெரிய அளவிலான தொழில் நிறுவனங் கள், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு பிறகு அலங்கார விளக்குகள் மற் றும் விளம்பர பலகைகளை அணைக்க வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்கள் 26 டிகி ரிக்கு மேல் ஏ.சி.களை அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பாலக் காடு மின்வட்டத்திற்குபட்ட பகுதிகளில் இரவு 7 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை மின்சாரம் ஒழுங்குப டுத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பாதிரிப்பாலா, ஓட்டப்பாலம், ஷோரனூர் செர்புளச்சேரி துணை மின் நிலையங்களில் மின் விதி முறைகள் அமலுக்கு வந்துள் ளன.

Exit mobile version