Home HEALTH & BEAUTY கேரளாவில் வேகமாக பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்!

கேரளாவில் வேகமாக பரவும் வெஸ்ட் நைல் வைரஸ்!

உகாண்டாவில் கண்டறியப்பட்ட வெஸ்ட் நைல் வைரஸ் இப்போது கேரளாவில் பரவி வருகிறது. கொசுக்கள் மூலம் பரவும் இந்த நோயால், காய்ச்சல், தலைவலி, உடலில் தடிப்புகள், அரிப்பு போன்றவை ஏற்படும். அறிகுறிகள் தெரிய இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேல் ஆகும். அறிகுறிகள் தெரிய துவங்கியவுடன் மருத்துவமனையில் சேர வேண்டும்.

ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுவரை 5 பேர் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், அதேசமயம் கவனத்துடன் இருக்குமாறும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது

Exit mobile version