kerala veterinary student: கேரளாவில் கால்நடை பல்கலை மருத்துவ மாணவர் ராகிங் கொடுமையால் விபரீத முடிவு எடுத்த விவகாரத்தில் அவர் 29 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சித்ரவதை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவின் வயநாட்டில் உள்ள பூக்கோட்டில் கால்நடை மருத்துவ பல்கலை செயல்பட்டு வருகிறது. 20 வயதான சித்தார்த்தன் என்பவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 18ல் விடுதி குளியல் அறையில் தூக்கில் தொடங்கிய நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மன உளைச்சலில் மாணவர் விபரீத முடிவு எடுத்ததாக கூறப்பட்டது.
அதே கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இறந்த மாணவர் சித்தார்த்தன் சக மாணவர்களால் 29 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் சித்ரவதை செய்து கொடூரமாக தாக்கப்பட்டார் என அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.