Home LATEST NEWS ஸ்பெயினில் தஞ்சம் புகுந்த நெதர்லாந்து இளவரசி! – Princess of Orange

ஸ்பெயினில் தஞ்சம் புகுந்த நெதர்லாந்து இளவரசி! – Princess of Orange

Princess of Orange: நெதர்லாந்து இளவரசி அமலியா. 20 வயது ஆகிறது. 2022ல் ஆம்ஸ்டர்டாம் பல்கலையில் அரசியல், சட்டம் மற்றும் பொருளாதாரம் படித்தார். அப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. க மாணவிகள் போல் படிக்க திட்டமிட்ட அவர் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுத்தியது. இதனால் இளவரசி அமலியா பாதுகாப்பு மிக்க அரண்மனைக்கு திரும்பியதாக அவரது அரச குடும்பம் தெரிவித்தது.

இது குறித்து அரசி மாக்சிமா கூறுகையில், எனது மகளால் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ முடியவில்லை. அரண்மனையை விட்டு வெளியேற முடியாத சூழல் உள்ளது. அவரது வாழ்க்கையில் பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என கண்ணீருடன் தெரிவித்து இருந்தார்.

இப்போது அமலியா மற்றும் பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோரை ஒரு கும்பல் கடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த தகவல்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டனர். இதனையடுத்து அவர் பாதுகாப்புடன் ஸ்பெயின் அழைத்துச் செல்லப்பட்டார்.

Exit mobile version