Home LATEST NEWS 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்!

5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுவன்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த 10 வயது சிறுவன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த ₹5 ரூபாய் நாணயம் எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சிறுவனை பரிசோதித்த மருத்துவ அலுவலர் மதன்குமார், சதீஷ், செந்தில் உள்ளிட்ட மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது தொண்டை பகுதியில் 5 ரூபாய் நாணயம் சிக்கி இருந்தது உறுதி செய்தனர்.

தொண்டை பகுதியில் சிக்கிக் கொண்டதால் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்புறப்படுத்த முடிவெடுத்து, குறித்த நேரத்தில் சிறுவன் விழுங்கிய நாணயத்தை அப்புறப்படுத்தினார்

Exit mobile version