நடு பேட்டில் அடிச்சு வெளுக்குறாங்க: புலம்பி தள்ளிய ராகுல்!

32

ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 57ஆவது போட்டியில், லக் னௌ அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை, 9.4 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபா ரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி இவ்வளவு மோச மான தோல்வியை சந்தித்த கே.எல்.ராகுல் கேப்டன்சி கேள்விக்குறியாகியுள்ளது.

தோல்வி குறித்து லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறி யதாவது: வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த மாதிரி யான பேட்டிங்கை தொலைக்காட்சிகளில்தான் பார்த்திருக் கிறோம் இது நம்பமுடியாத பேட்டிங் எல்லா பந்துகளை யும் நடு பேட்டில் அடிக்கிறார்கள். அவர்களது திறமைக்கு பாராட்டுகள் சிக்ஸ் அடிக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2ஆவது இன்னிங்ஸில் ஃபிட்ச் வேறு மாதிரி இருந்தது. அவர்களை விக்கெட் எடுக்க வாய்ப்பே வழங்கவில்லை.

முதல் பந்திலிருந்தே எங்களை அடித்து நொருக்கினார்கள். தோல்வியின் பக்கம் இருக்கும்போது முடிவுகள் எடுத்தது குறித்து நிறைய கேள்விகள் இருக்கும். 40-50 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் பவர் ஃபிளே வில் விக்கெட்டுகளை விட்டதால் எங்களால் திரும்பவும் நல்ல கணத்தை கொண்டுவர முடியவில்லை. ஆயுஷ், நிகோ லஸ் பூரன் நன்றாக விளையாடி 166 கொண்டு வந்தார்கள். 240 அடித்திருந்தாலும் ஹைதராபாத் சேஸிங் செய்திருப் பார்கள் என்றே தோன்றுகிறது எனக் கூறினார்.