Home LATEST NEWS ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயமா?

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயமா?

மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை, கோடை சீசனுக்கு ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளை இ – பாஸ் நடைமுறையை பின்பற்றியே அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான வாகனங்கள் செல்வதால், சுற்றுச் சூழலுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும், உள்ளூர் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்பதால் இந்த இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பத்திருக்கிறது.

உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இ-பாஸ் குறித்து மக்களிடையே விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version