விமானத்தில் இருக்கை பிடிப்பதில் அடிதடி- வீடியோ!

22

அமெரிக்காவில் விமான இருக்கையில் இடம் பிடிப்பதில் இரு பயணிகளிடையே நடந்த அடிதடி வீடியோ வைரலாகி வருகிறது. தைவானின் தைப்பே சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா நோக்கி வந்து கொண்டிருந்தது.

இடையே சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கிய போது விமானத்தில் சில பயணிகள் ஏறினர். அப்போது இரு பயணிகளிடையே இருக்கை பிடிப்பதில் வாய்த்தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. விமானத்திற்குள்ளேயே ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

விமான ஊழியர்கள், உடன் பயணித்த சக பயணிகள் ஆகியோர் சண்டையை விலக்கி விட்ட போதிலும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இருவர் மீது சான்பிரான்சிஸ்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.