Home LATEST NEWS போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு!

போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்த ஹமாஸ் அமைப்பு!

காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் படைகள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத் துவதாக அமெரிக்க, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இஸ்ரேல் காசா இடையே அமைதி ஏற்பட எகிப்து, கட்டார் நாட்டு அரசுகள் சமரசம் செய்து வந்தன. இந்த நிலையில், இரு நாடுகளின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.

காசா மக்களின் கடைசி புக லிடமாக இருக்கும் கிழக்கு ரபா மீதும் இஸ்ரேல் படைகள் தாக் குதல் நடத்த திட்டமிட்டது. இதனை அடுத்தே போர் நிறுத்தத் திற்கு ஹமாஸ் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முடிவை வரவேற்று அங்குள்ள மக்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

Exit mobile version