30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் வீடியோ!

44

‘இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்’ என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கி ரஸ் எம்.பி., ராகுல் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள் ளார். வீடியோவில் பேசியதாவது. ராகுல் பிரதமர் மோடியின் பொய் பிரசாரங் களில் கவனம் சிதறாமல் உறுதியாக இருங்கள்.

பிரத மர் பதவி தன் கையை விட் டுப்போகிறது என்ற பயத் தில் மோடி இருக்கிறார். இன்டியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப் பப்படும். ஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புப் பணிகளைத் துவங்குவோம். பணமதிப்பிழப்பு, தவறான வரி நடைமுறைகளை பிரத மர் மோடி புகுத்தினார்.

2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்ப டும் என பிரதமர் மோடி கூறி யது பொய்யானது. நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், வெறுக்காதீர்கள், ஒரு வேலையைத் தேர்ந்தெடுங் கள். இவ்வாறு அவர் பேசினார்.