இந்த அவமானம் தேவையா? ராகுலை திட்டிய அணி உரிமையாளர்!

21

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மோச மான தோல்வியை தொடர்ந்து, லக்னௌ அணியின் கேப் டன் கே.எல்.ராகுலுடன் அணியின் உரிமையாளர் காட்ட மாக விவாதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி யுள்ளது. ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில், லக்னௌ அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை. 10 ஓவர்களில் கடந்து 10 விக்கெட் டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி.

அடுத்தடுத்து இரு தோல்விகளால் புள்ளிப்பட்டிய லில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள லக்னெள அணி யின் ரன்ரேட்டும் மோசமாக குறைந்துள்ளது. அடுத்து வரும் இரு போட்டிகளிலும் வென்றால்தான், லக்னௌ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில், போட்டி முடிந்த வுடன் மைதானத்தில் வைத்து அனைவரின் முன்னிலையி லும் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா காட்டமாக பேசியுள்ளார்.

இந்த காட்சிகள் நேரலையில் வந்த நிலையில், இணையத்தில் கே.எல்.ராகுலின் ரசிகர் கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். எதுவாக இருப்பினும், ஒரு அணியின் கேப்டனை அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு தரக்குறைவாக நடத்துவது நல்லதுக்கல்ல என்றும் அடுத்தாண்டு கே.எல்.ராகுல் வேறு அணிக்கு மாற வேண்டும் என்றும் ரசிகள் பதிவிட்டு வரு கின்றனர்.