Home ENTERTAINMENT வெறும் 9 நிமிட வீடியோ தானே? மிரளும் ராஷ்மிகா! – Rashmika Mandhana

வெறும் 9 நிமிட வீடியோ தானே? மிரளும் ராஷ்மிகா! – Rashmika Mandhana

Rashmika Mandhana: இந்திய அளவில் டிரெண்ட் ஆன நடிகை என்றால் அது ராஷ்மிகா மந்தனா தான். அவருடைய கியூட் எக்ஸ்பிரஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வித விதமான முக பாவனைகளை காட்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கிட்டதட்ட வசூல் அள்ளும் மொழி படங்களில் நடித்துவிட்டார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான படம் அனிமல். ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். உச்சக்கட்டமாக சில காட்சிகளில் உள்ளாடையுடன் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். லிப் லாக் காட்சிகளில் இருவரும் அதிகமாகவே இந்த படத்தில் நடித்திருந்தார்கள். முகம் சுழிக்கும் சில காட்சிகளிலும் ராஷ்மிகா நடித்திருந்தார்.

அனிமல் படம் குறித்து ராஷ்மிகா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது இப்போது வைரலாகின்றது. மொத்தமே 9 நிமிட காட்சி தான் அப்படி இருந்தது. படப்பிடிப்பில் இருந்த அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் என்னவோ மக்களுக்கு பிடிக்கவில்லை. இப்போதுள்ள மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை என ராஷ்மிகா கூறியிருந்தார்.

Exit mobile version