Home LATEST NEWS பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை!

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை!

பாகிஸ்தானில் இருந்து ரஷ்யாவுக்கு அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் 40 லட்சம் டன் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் நுண்ணுயிர் கண்டறியப்பட்டது.

இது ரஷியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து இது தொடர்பாக ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இதே நிலை தொடர்ந்தால் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 2019ல் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய ரஷ்யா தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version