Home LATEST NEWS 13 வயது பள்ளி மாணவிக்கு அறையில் காதலனால் நடந்த சோகம்! – School Girl

13 வயது பள்ளி மாணவிக்கு அறையில் காதலனால் நடந்த சோகம்! – School Girl

School Girl: சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி திடீரென காணாமல் போனார். அவர் சென்னை கொருக்குபேட்டை வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாணவியை பத்திரமாக மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில்திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

திருமண ஆசை காட்டி மாணவியை 27 வயதான ராஜபாண்டி கடத்தி சென்று வீட்டில் சிறை வைத்துள்ளார். அவருடைய நண்பர் ரமேஷ் என்பவரும் அந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கொடூரமான முறையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாண்டி, ரமேஷ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான ரமேஷ் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர். ஊர் காவல் படையில் டிரைவராக வேலை பார்த்துள்ளார். தன்னை வெளியில் போலீஸ் என்று சொல்லி கொண்டு பந்தாவாக சுற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Exit mobile version