Home LATEST NEWS செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: பகீர் கிளப்பும் அமலாக்கதுறை!

செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார்: பகீர் கிளப்பும் அமலாக்கதுறை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைகக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைக்க மறுக்கிறார். வழக்கை 3 மாதங்களில் முடிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கதுறை தரப்பில் வாதிடப்பட்டது. அமலாக்கத்துறையினர் பதில் மனு தாக்கல் செய்த நிலையில் விசாரணையை ஜூன் 21ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Exit mobile version