கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில், அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது ஆபாச வீடியோக்கள் அடங்கிய 25 ஆயிரம் பென் டிரைவ்களை காங்கிரஸார் கர்நாடகா முழுவதும் விநியோகித்துள்ளனர். வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி அதனை பரப்பியுள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாருக்கு நெருக்கமானவர்கள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.