Home LATEST NEWS கடையில் இரண்டு மாணவிகள் செய்த மோசமான செயல்! – Girls Cheat

கடையில் இரண்டு மாணவிகள் செய்த மோசமான செயல்! – Girls Cheat

Girls Cheat: ஆந்திரப் பிரதே மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பவ்யா லிங்கனகுண்டா, யாமினி வல்கல்புடி ஆகிய இருவரும் அமெரிக்காவின் நியூஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர். ஹோபோகன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த மார்ச் 19ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் ஹோபோகன் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு மாணவிகளையும் கைதுசெய்து விசாரித்தனர்.

இருப்பினும் தவறு செய்திருப்பது நிரூபணம் ஆகி உள்ளதால், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என காவல் துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டால் இரு மாணவிகளின் கல்வி, வேலை, விசா உள்ளிட்டவற்றில் பிரச்னை ஏற்படலாம் எனக் காவல் துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version