Home LATEST NEWS டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்!

டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் கூண்டோடு நீக்கம்!

அனுமதியின்றி நியமிக்கப்பட்ட டெல்லி மகளிர் ஆணையத்தின் 223 பணியாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

2017ல் அப்போதைய டெல்லி மகளிர் ஆணைய தலைவரான ஸ்வாதி மாலிவால் நிதித் துறை மற்றும் லெப்டினன்ட் கவர்னரின் அனுமதியின்றி இந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.

2017ல் சக்சேனாவிடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Exit mobile version