உத்தரப்பிரதேசத்தில் ஒரு தொடக்கப் பள்ளியில் வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றி உள்ளது பள்ளி நிர்வாகம். இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர். இதனால் வெப்பம் தணிவதோடு, குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும் வீடியோவையும் பள்ளி நிர்வாகிகள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
வகுப்பறை தரையைச் சுற்றி இரண்டு அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு ஒரு அடி உயரத்துக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில்தான் அந்த குழந்தைகள் நீந்தி விளையாடி வருகின்றனர். நீச்சல் குளம் கட்டிய பின்னர் அதிக அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.