உத்தரப்பிரதேசத்தில் மனன் ஜைதி, மெஹர் ஜஹான் தம்பதிக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தனி குடித்தனம் செல்ல வேண்டும் என்று கணவரிடம் மெஹர் ஜஹான் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தனிக்குடித்தனம் செல்ல முடியாது என்று ஜைதி உறுதியாக கூறிவிட்டார்.
ஆத்திரமடைந்த மெஹர் ஜஹான் கணவன் ஜைதியை அன்றாடம் அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார். மனைவியை போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என அவரது மனன் ஜைதி முடிவு செய்தார். மனைவிக்கு தெரியாமல் வீட்டின் படுக்கை அறையில் ரகசியமாக கேமராவை பொருத்தினார்.
மனன் ஜைதியின் கை, கால்களை துணியால் கட்டிப்போட்ட மெர் ஜஹான், அவர் மீது ஏறி அமர்ந்து குரல்வளையை நெரித்துள்ளார். அத்துடன் சிகரெட்டைக் குடித்து தனது கணவரின் அந்தரங்க உறுப்பில் நெருப்பால் சூடு வைத்துள்ளார். இது ரகசியமாக கேமராவில் பதிவான வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.