கிரிக்கெட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ் சர்ஸ் பெங்க ளூரு மற்றும் குஜராத் டைட் டன்ஸ் அணி கள் மோதின. இந்த ஆட்டத் தில் முதலில் பேட் டிங் ஆடிய குஜராத் அணி 19.3 ஓவர் க ளில் அனைத்து விக் கெட் டை யும் இழந்து 147 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. குஜராத் தரப் பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் சிராஜ். யாஷ் தயாஸ்ல், வைசாக் ஆகி யோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங் கிய பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 64 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ்-க்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நி லையில் இந்த ஆட்டம் முடிந்த பின்னர் குஜராத் வீரர் நூர் அகமதுவுக்கு விராட் கோலி தனது கையெழுத்திட்ட ஆர். சி.பி ஜெர்ஸியை வழங்கி பாராட்டி உள்ளார். அந்த ஜெர் சியில், அன்புள்ள நூர் நன்றாக பவுலிங் செய்தீர்கள் – உங் களுக்கு நல்வாழ்த்துக்கள் என எழுதி கோலி கையெழுத் திட்டுள்ளார். கோலி 42 ரன் எடுத்த நிலையில் நூர் அகம துவின் பந்துவீச்சில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக் கது.