கர்நாடகாவில் பல மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாலையில் அதிக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணராஜசாகர், ஹோனகெரே, மிடிகேஷி, கோலார், பெங்களூரு சர்வதேச விமான நிலையம், பாகமண்டல், தேவனஹள்ளி, கொள்ளேகலா, மாண்டியா ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
கர்நாடகாவில் பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தாலும், வெயிலின் அளவும் பல பகுதிகள் அதிகரித்து காணப்படுகிறது. கலபுர்கியில் அதிகபட்சமாக 44.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹொன்னாவரில் 34.3, கார்வாரில் 37.0, ஷிராலியில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.