Home LATEST NEWS உடல் எடையை குறைக்க ஆபரேஷன்: சில நிமிடத்தில் பிரிந்த உயிர்!

உடல் எடையை குறைக்க ஆபரேஷன்: சில நிமிடத்தில் பிரிந்த உயிர்!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் ஹேமசந்திரன். வயது 26. பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஹேமசந்திரன் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version