பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன்!

27

முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல். இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலில் இவர் ஹசன் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டுள்ளார். ஏற்கனவே ஹசன் தொகுதியின் எம்பியாக பிரஜ்வல் செயல்படுகிறார்.

பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது போன்ற ஒரு வீடியோவும் புகைப்படங்களும் பரவிய நிலையில் அது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். பிரஜ்வலுக்கு சிக்கல் ஏற்படுத்துவதற்கென்றே போலியான வீடியோவை காங்கிரசார் பரப்பி வருவதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சியினர் விளக்கம் அளித்துள்ளனர். அதேசமயத்தில் பாஜக இந்த விவகாரத்தில் இருந்து சற்றே விலகியே உள்ளது.