மனுஷனாவே மதிக்கல! ஹர்திக் பாண்டியாவை விரட்டிய மும்பை! – Hardik Pandya

77

Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவே கருதவில்லை என சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்த மூன்றிலும் தோல்வி அடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இதில் மூன்றாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி படு தோல்வி அடைந்தது. தோல்வி அடைந்த பின் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் யாருமே இல்லை. ஹர்திக் பாண்டியா மட்டுமே தனியாக ஆளாக இருந்தார். எப்போதும் ஒரு அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளரை சுற்றியே வீரர்கள் இருப்பார்கள்.

ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் உள்ள அதிருப்தி காரணமாக மும்பை அணியின் வீரர்கள் பலரும் அவரை மதிப்பதில்லை. இப்போது மும்பை அணியின் கேப்டன் மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. பிம்பம் ஏற்பட்டது.