தாங்க முடியாத வாகன இரைச்சல் இதயத்திற்கு ஆபத்தாகுமா?

23

ஒவ்வொரு 10 டெசிபல் ஒலி அதிகரிப்பின்போதும் உயர் ரத்த அழுத்தம், ரத்த நாளகோளாறுகள், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் 3.2% அதிகரிப்பதாக ஆய்வுகள் சொல்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கேட்கும் வாகன இரைச்சல் மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இரைச்சல்களை குறைக்க வாகன வேகத்தை குறைப்பது, உரிய தடுப்புகளை வைப்பது, நவீன டயர்களை பயன்படுத்துவது போன்ற யோசனைகளை கையாளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களும் கார்களும் பேருந்துகளும் ரயில்களும் எழுப்பும் அதீத பேரொலிகள் இதய ரத்த நாள நோய்களை ஏற்படுத்த தூண்டுதலாக அமையும் என்றும் சில நேரங்களில் மாரடைப்பைக் கூட ஏற்படுத்தும் என ஆய்வுகள் சொல்கிறது.