விக்கிரவாண்டி எம்எல்ஏவுக்கு என்ன தான் ஆனது? – Vikravandi

116

Vikravandi: விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி. 71 வயதான அவர் கடந்த 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 10 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. சிகிச்சை முடிந்து சென்னையில் இருந்து வீடு திரும்பினார். அதன்பின் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்க சென்றார். ஸ்டாலின் கூட்டத்திற்கு வரும் முன்பு ஓய்வு அறையில் அமைச்சர் பொன்முடி, வேட்பாளர் விஷ்ணுபிரசாத்துடன் புழகேந்தி பேசிக்கொண்டிருந்தார். அப்போது புகழேந்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் காலமானார்.