தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் இன்பா. இவர் பொருளாதார வசதி இல்லாததால், வீட்டிலிருந்தே படித்தார். ஏற்கனவே, இரண்டு முறை மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை.
எனினும் விடாமுயற்சியுடன் மூன்றாம் முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்; அகில இந்திய அளவில், 851வது இடம் பெற்றுள்ளார். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை பெற்று தேர்வுக்கு படித்து வந்தார்.
மெலிம் கடந்த ஆண்டு மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, மாதம் 25,000 ரூபாய் உதவித்தொகை பெற்றார்.