காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் கடந்த 4 நாட்களாக காணாமல் போயிருந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர்.
இதற்கிடையே மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டு ஜெயக்குமார் எழுதியதாக ஒரு கடிதம் வெளியானது. அதில் தங்களது வீட்டை சில மர்ம நபர்கள் கண்காணித்து வருவதாகவும் அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் உவரி அருகே ஜெயக்குமாரின் உடல் பாதி எரிந்த நிலையில் ஜெனியர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை நெல்லை விரைந்துள்ளார்.