உல்லாசமாக இருந்த வீடியோக்களை மனைவிக்கு அனுப்பிய கணவன்!

31

சேலம் தாரமங்கலத்தை சேர்ந்த ஜெயசங்கருக்கும், சாந்திக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். அப்போது சின்னப்பொண்ணு என்ற பெண்ணுக்கும் ஜெயசங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

கள்ள காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு ஜெய்சங்கர் அனுப்பியதாக தெரிகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சாந்தி தற்கொலைக்கு காரணமான அவருடைய கணவர் ஜெய்சங்கர், சின்னப்பொண்ணுவை தாரமங்கலம் போலீசார் தேடி வந்தனர். ஜெய்சங்கர் தன்னுடைய அக்கா மாரியம்மாள் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் ஜெய்சங்கர், சின்ன பொண்ணுவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.