தடைகளை தாண்டி வரும் ஆம் ஆத்மி பிரச்சார பாடல்!

25

ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது. டெல்லியில் உள்ள ஏழு பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் 25-ம் தேதியும், பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அர சியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் பழிவாங்கும் நோக்கில், தங்கள் கட்சி தலை வரை மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறையில் அடைத்துள் ளதாக கூறி ஆம் ஆத்மி கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின் றனர். இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசை விமர்சிக்கும் வகை யில் இரண்டு நிமிடங்கள் உடைய பிரச்சார பாடலை ஆம் ஆத்மி சமீபத்தில் வெளியிட்டது.

இது தேர்தல் நடத்தை விதி மீறல் எனக்கூறி, அக்கட்சியின் பிரச்சார பாடலுக்கு தலைமை தேர்தல் கமிஷன் தடை விதித்து இருந்தது. தற்போது ஆம் ஆத்மி கட்சி தலைமை பிரச்சார பாடலில் சில திருத்தங்களை செய்துள்ளது. இந்நிலையில் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார பாடலுக்கு இந்திய தேர் தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.